5 லட்சம் ரோஜா மலர்களை கொண்டு பிரம்மாண்ட பிரமிடு உருவாக்கி கின்னஸ் முயற்சி..!

341

ஈக்வேடார் நாட்டில் கின்னஸ் சாதனைக்காக ரோஜா மலர்களை கொண்டு பிரம்மாண்டாக உருவாக்கப்பட்ட பிரமிடு, காண்போரை வெகுவாக கவர்ந்தது.

ஈக்வேடாரில் உள்ள பெட்ரோ மாண்டயோ நகரில் 3 ஆயிரத்து 608 சதுர அடியில் இந்த பிரமிடு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதிலிருந்தும் 5 லட்சம் ரோஜாக்கள் வரவழைக்கப்பட்டன. கின்னஸ் சாதனை முயற்சிக்காக பலர் இணைந்து வரிசையாக ரோஜா மலர்களை அடுக்கி வைத்துள்ளனர். இந்த பிரமீடை கின்னஸ் சாதனை புத்தக நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் முறையான அறிவிப்பு வெளியிடப்படும். இதற்கு முன்னதாக ஜெர்மனி நாட்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரோஜாக்களைக் கொண்டு பிரமீடு உருவாக்கப்பட்டதே கின்னஸ் சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. .