வியட்நாமில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்..!

143

வியட்நாமில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான வியாட்நாமில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் 18 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கி மாயமான 40-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.