நிதியை ஏற்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தலைவர் கி. வீரமணி

1078

வெளிநாட்டு நிதியை ஏற்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் உணவு, இருப்பிடத்திற்காக திண்டாடும் நிலைமை தொடர்ந்து நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்வோர் மனித நேயத்தோடு கேரளாவிற்கு உதவுவது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். கேரளாவிற்கு மத்திய அரசு அறிவித்திருப்பது முதல் கட்ட உதவி என்று கருதப்பட்டாலும் அது யானை பசிக்கு போடப்பட்ட சோளப்பொறி போன்றது என்று தெரிவித்துள்ளார்.

கேரள மக்களால் வளமாகும் ஐக்கிய அமீரகம் மனித நேயத்தோடு 700 கோடி ரூபாய் வழங்க முன் வந்திருப்பதை மத்திய அரசு ஏற்க மறுப்பது சீரிய முடிவு ஆகாது என்று கூறியுள்ள கி. வீரமணி, மத்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.