கேரளாவில் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம், மீட்பு பணி தீவிரம்..!

215

கேரளாவில் வெள்ளம் பாதித்த இடங்களில் இந்திய கடற்படையை சேர்ந்த 21 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் வயநாடு, கோழிகோடு, கன்னூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதால் மீட்பு பணிகளில் ராணுவம் இறங்கியுள்ளது. இந்தநிலையில் வெள்ளம் பாதித்த இடங்களில் இந்திய கடற்படையை சேர்ந்த 21 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பெரும்பவூரில் மட்டும் 45 ராணுவ வீரர்கள் மருத்துவம் உள்ளிட்ட மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை கனமழைக்கு 67 பேர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே வயநாடு, கோழிகோடு, கன்னூர், காசர்கோடு, மலப்புரம், பாலக்காடு, இடுக்கி, மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.