வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு..!

150

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு செய்து, மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆவாரங்காடு, ஜனதா நகர், சத்யாநகர் உள்ளிட்ட இடங்களை நெடுந்தூரம் தண்ணீரில் நடந்து சென்று அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், மின்சாரத்துறை முதன்மை செயலாளர் பாலச்சந்திரன், காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் ,பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டோருக்கு அமைச்சர் தங்கமணி நிவாரண உதவிகளை வழங்கினார்.