சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

132

மேகமலை வனப்பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சின்னசுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னசுருளி அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் உள்ள இந்த அருவிக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனர். இந்நிலையில் மேகமலை வனப்பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சின்னசுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வனத்துறையினரும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.