உத்தர பிரதேச மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் யோகி ஆதித்யநா..!

473

உத்தர பிரதேச மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மழையால் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 53 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதனால் பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்கள், சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் மூலம் மாநிலத்தின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.