இந்தோனேசியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உடல் சிதறி உயிரிழப்பு….. மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்ததாக தகவல்

276

இந்தோனேசியாவில் ராணுவ விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று விமானிகள் உட்பட 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவில் திமிகா என்ற இடத்திலிருந்து ராணுவத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று வாமேனா என்ற நகருக்கு சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட அரை மணிநேரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் முடுக்கி விடப்பட்டனர். நீண்டநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு வாமேனா அருகே விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த விபத்தில் மூன்று விமானிகள் உட்பட 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். விமானத்தின் உதிரி பாகங்கள் மலைப்பகுதியில் சிதறி கிடப்பதை மீட்புக்குழுவினர் உறுதி செய்தனர். மோசமான வானிலை காரணமாக விபத்து நடைபெற்றதாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.