தேசியக்கொடியை அவமரியாதை செய்பவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

353

தேசியக்கொடியை அவமரியாதை செய்பவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
70-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளநிலையில், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு துறை அலுவலகங்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட தேசியக்கொடிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக்கொடியின் அளவு மற்றும் அதன் குறியீடுகளுக்கான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? எனபதையும், அவமரியாதை செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக, விழிப்புணர்வு திட்டங்களை நடத்தி, பொதுமக்களிடையே விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. விதிமுறைகளை மீறி, தேசியக்கொடியை இழிவுபடுத்துவது, கிழிப்பது, மிதிப்பது போன்ற அவமரியாதைகளை செய்தால், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.