துறைமுக கழகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி..!

306

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகத்தில் தலைகீழாக தேசியக் கொடி ஏற்றப்பட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் துறைமுக பொறுப்பு கழகத் துணைத் தலைவர் வையாபுரி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் ஏற்றிய தேசியக் கொடி தலைகீழாக உள்ளதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேசியக் கொடி இறக்கப்பட்டு மீண்டும் சரியாக ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன் விமர்சிக்கப்பட்டும் வருகிறது.