அடுத்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற உலக உணவு கருத்தரங்களில் கலந்து கொண்டு பேசிய அவர், சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறினார். உலக அளவில் இந்தியாவின் வணிகம் 100வது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் அறிக்கையே இதற்கு சிறந்த சான்று கூறிய பிரதமர் மோடி, உணவு பதப்படுத்தல் தொழில்களில் முதலீடு செய்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் நல்ல வருவாய் ஈட்டலாம் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் இயற்கை உணவு பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், அதற்கு ஏற்றவாறு புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக ஆக்குவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் பிரதமர் மோடி உறுதிப்பட தெரிவித்தார்.