500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத் திரும்பினர் !

188

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார கடல்பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்திருப்பதால் மீன்பிடிக்கச் சென்ற ஐநூருக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத் திரும்பினர்.

குளச்சல், மண்டைக்காடு, அழிக்கால், கடியப்பட்டணம், முட்டம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் நேற்றிலிருந்து கடல்சீற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. கடல்நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துவிட்டதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடல் சீற்றம் அதிகரித்திருப்பதாலும், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாலும் கடலுக்கு மீன்பிடிக்க ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பினார்கள்.