இந்திய, இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் இடையே டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை…

224

தமிழக, இலங்கை மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இருநாட்டு வெளியுறவுத்துறை மட்டத்திலான பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது
தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இந்தியா மற்றும் இலங்கை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த மாதம் நடைபெற்றது. இதில், இருநாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்தக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்தும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 51 பேரை விடுதலை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட முடிவின் படி கொழும்புவில் வரும் 2 ஆம் தேதி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.