மீனவர்களின் படகுகளை மீட்க தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை செல்கின்றனர்.

பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மீன்பிடித்த ராமேசுவரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் 168 படகுகள் கடந்த 4 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன. படகுகள் அனைத்தும் இலங்கை கடலோரப் பகுதிகளில் பராமரிப்பின்றி பல காலமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் கடல் அலைகள் மற்றும் காற்றின் வேகத்தால் ஒன்றோடு ஒன்று மோதி கடுமையாக சேதமடைந்தன.

இதனிடையே, மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்ததை அடுத்து, படகுகளை விடுவிக்க இலங்கை அரசு கடந்த மாதம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து, படகுகளை மீட்பதற்காக தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை செல்கின்றனர்.