தமிழக மீனவர்கள் 20 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை !

156

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெடுந்தீவுக்கு வடகிழக்கே லைட்ஹவுஸ் பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அபோது, நாகை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். மீனவர்களிடமிருந்து விசை படகுகளை பறிமுதல் செய்த கடற்படையினர், காரை நகர் கடற்கரை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் 20 மீனவர்களும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி அண்மையில் 8 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.