இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை..!

262

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 16 பேர் இன்று நாடு திரும்புகின்றனர்.

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 8 மீனவர்வர்களையும், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்களையும் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்ட 16 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து மீனவர்களை விடுவிக்கக்கோரி சி.ஐ.டி.யு மீன்பிடித் தொழிற் சங்கத்தினர் சென்னையில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இதன்படி இலங்கை நீதிமன்றம் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களை கடந்த வாரம் விடுதலை செய்தது. இந்நிலையில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வந்துள்ளது.