மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..!

102

தமிழகத்தில் உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து கடலோர மற்றும் உள்நாட்டு மீன்துறை இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கஜா புயல் தொடர்பாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும், மீனவர்களை பத்திரமாக கரைதிரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில், புயல் மற்றும் இயற்கை இடர்பாடுகளை உடனுக்குடன் மீனவர்களுக்கு வழங்க ஏதுவாக மீன்துறை இயக்குனர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு 24 மணி நேரம் இயங்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே கஜா புயலால் தமிழகத்தில் 4 ஆயிரத்து 400 இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன