மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!

82

நீலகிரி, கோவை, உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புவனேஸ்வருக்கு தென்மேற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டு உள்ளது. இது தமிழக பகுதிகளை நோக்கி நகர்வதால், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இடைவெளி விட்டு மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்துக்கு, வடக்கு ஆந்திரா கடற்கரை மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.