இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் அத்துமீறல்..!

132

நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மீனவர்கள் பத்துக்கு மேற்பட்ட படகுகளில் சென்று நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை விரட்டியடித்ததுடன், 3 படகுகளில் இருந்த 13மீனவர்களைச் சிறைப்பிடித்துச் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் அருகே உள்ள காங்கேசன் துறைக்குக் கொண்டுசென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பின் அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியடிப்பதும், படகுகளையும் மீன்பிடி கருவிகளையும் சேதப்படுத்துவதும், மீனவர்களைச் சிறைபிடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.