நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் !

112

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் மீனவ கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி வந்ததாகக் கூறி விரட்டியடித்துள்ளனர். மேலும், இரண்டு படகுகளின் மீது மோதி, அவற்றை சேதப்படுத்தியுள்ளனர். தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தியதாகக் கூறி, ஒரு படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அதில் இருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். இதுதொடர்பாக, ராமேஸ்வரம், பாம்பன் கடலோர மீனவ கிராமங்களில் தகவல் பரவியதை அடுத்து, அப்பகுதி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.