தொடர்மழை காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பு!

199

தொடர்மழை காரணமாக கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதால், மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
வடக்கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 நாட்களாக மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், ஆயிரக் கணக்கான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. நூற்றுக் கணக்கான விசைப் படகுகளும், நாட்டு படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், மீன்பிடி சார்ந்த தொழில்களும் முடங்கி உள்ளன.
புதுச்சேரியிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 6 நாட்களாக வேலை இல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மழைக்காலத்தில் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.