ஈரான் சிறையில் கடந்த 4 மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டிருந்த மீனவர்கள் இன்று தமிழகம் வந்தடைந்தனர்.

295

ஈரான் சிறையில் கடந்த 4 மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டிருந்த மீனவர்கள் இன்று தமிழகம் வந்தடைந்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஈரான் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக்கோரி தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 9 மீனவர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விமானம் மூலம் சென்னை வந்த மீனவர்கள் அரசு சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.