புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறைப்பிடிப்பு | இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

118

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மேலும் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.

எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பதும், கைது செய்வதும் தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த படகையும் சிறைபிடித்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் காங்கேசன் முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால் மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன.