இலங்கை சிறைகளில் உள்ள 89 தமிழக மீனவர்களை விடுதலை செய்யலாம் என்ற அந்நாட்டு தலைமை நீதிபதி பரிந்துரை !

313

இலங்கை சிறைகளில் உள்ள 89 தமிழக மீனவர்களை விடுதலை செய்யலாம் என்ற அந்நாட்டு தலைமை நீதிபதியின் பரிந்துரையை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் நாளை விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 89 மீனவர்கள் தற்பொழுது இலங்கை சிறைகளில் உள்ளனர். இவர்கள் தொடர்பான வழக்கு இன்று இலங்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனிதாபிமான அடிப்படையில் இலங்கை சிறைகளில் உள்ள 89 தமிழக மீனவர்களை விடுதலை செய்யலாம் என்று அந்நாட்டு தலைமை நீதிபதி பரிந்துரை செய்தார். இதனை அரசுத்தரப்பும் ஏற்றுக் கொண்டதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் நாளை விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. இருப்பினும் தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப அளிப்பது தொடர்பாக எந்த தகவலும் அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை. கடந்த மாதம் அத்துமீறி இலங்கை எல்லைக்குள் செல்லும் தமிழக மீனவர்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிக்கும் சட்டத்தினை இலங்கை அரசு நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.