தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு : இலங்கை கடற்படையினர் அத்துமீறல்

119

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்க்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் பெய்ட்டி புயல் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 8 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் நேற்று இரவு 800க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீனவர்கள் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது,அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்தினர்.

மேலும் அவர்களின் படகுகளில் இருந்த வலைகளை சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு கரை திரும்பினர். 8 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் தடுத்து விரட்டியடித்த சம்பவம் மீனவ கிராமங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.