கொச்சி அருகே படகு மீது கப்பல் மோதி விபத்து : மாயமான 7 மீனவர்களை மீட்க அதி நவீன படகுகள்

336

கடலில் மாயமான கன்னியாகுமரி மீனவர்கள் 7 பேரை அதி நவீன படகு மூலம் தேடும் பணி நடைபெற்று வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் கொச்சி அருகே படகின் மீது கப்பல் மோதியதில் கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் மாயாமான 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆண்டோ லெனின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில் கடலில் காணாமல் போனவர்களின் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாயமான 7 மீனவர்களை அதிநவீன படகுகள் மூலம் தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள், நிபுணர்கள் அடங்கிய குழு ஆழ்கடலில் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.