எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

156

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். மேலும், மீனவர்கள் பயன்படுத்திய படகு மற்றும் மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் எடுத்து சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள், காங்கேசன் துறைமுக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக அவர்களின் படகுகள் இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 500 படகுகளில், 25 படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.