தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!

107

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மேலும் 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், படகுகளை சேதப்படுத்தி கடுமையாக தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்றுகாலை, மேலும் 5 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது தமிழக மீனவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடராமல் இருக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்