மீனவ சங்க பிரதிநிதிகள் முதலமைச்சருடன் சந்திப்பு!

443

காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்டுதரக்கோரி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக சென்னை நொச்சிகுப்பம் பகுதி மீனவர்களும் சேப்பாக்கத்தில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மீனவ சங்க பிரதிநிதிகள் இன்று சந்தித்து பேசினர். சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், காணாமல் போன மீனவர்களை தேடும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக கூறினார்.