டெல்லியில் இன்று முதல் முறையாக, மத்திய அமைச்சரவை கூட்டம்..!

124

இரண்டாவது முறையாக, பிரதமர் மோடி பதவியேற்றபின், டெல்லியில் இன்று முதல் முறையாக, மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க, தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, இரண்டாவது முறையாக, பிரதமராக கடந்த 30 ஆம் தேதி மோடி பதவியேற்றார். அவருடன், 57 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதன் பின், மத்திய கேபினட் அமைச்சர்கள் கூட்டம், கடந்த 31 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் அனைவருக்கும், ஆண்டுக்கு, ஆறாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, நாடாளுமன் றமழைக்கால கூட்டத்தொடர், வரும் 17 ஆம் தேதி துவங்கி, அடுத்த மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூலை 5ம் தேதி முழுமையான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், இரண்டாவது முறையாக, பிரதமராக மோடி பதவியேற்ற பின், மத்திய அமைச்சரவை கூட்டம், டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

முன்னதாக நடைபெற்ற மத்திய கேபினட் கூட்டத்தில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்தும், உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதில் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டன. மத்திய அரசின், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டங்கள் பற்றி, அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.