பட்டாசு உற்பத்தியாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – சுமார் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிப்பு..!

254

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால், சுமார் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், அதன் சார்பு தொழில் நிறுவனங்களும் முடங்கியுள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானம் இல்லாமல் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சுமார் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.