தீயணைப்புத் துறையினருக்கான மூன்று நாள் விளையாட்டுப் போட்டிகள் கோவையில் தொடங்கின.

266

தீயணைப்புத் துறையினருக்கான மூன்று நாள் விளையாட்டுப் போட்டிகள் கோவையில் தொடங்கின.

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் கோவையில் மூன்று நாட்கள் நடைபெறுகின்றன. இதில் தமிழகத்தின் 5 மண்டலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். தொடக்க நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை மேற்கு மண்டல இயக்குனர் சாகுல்ஹமீது கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். தீ விபத்தின்போது மேற்கொள்ளப்படும் துரித நடவடிக்கைகள் தொடர்பான, செயல் முறை விளக்க நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பொன்னுசாமி, தலைமையக துணை இயக்குனர் பிரியா ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.