திருப்பூரில் பிரபலம் அடைந்து வரும் ஃபையர் கட்டிங் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சென்னையில் பிரபலமான ஃபையர் கட்டிங்கை இளைஞர்கள் ஆர்வமுடன் வரவேற்றனர். இந்தநிலையில், திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் பகுதியில் ஃபையர் கட்டிங் கலாச்சாரம் பரவி வருகிறது. ரிங்ரோடு பகுதியில் சிகை அலங்காரம் கடை நடத்தி வரும் தீனா என்பவர் ஃபையர் கட்டிங்கை வெட்டி வருகிறார். இவரது கடைக்கு சுற்று வட்டார பகுதியில் வரவேற்பு அதிகரித்து உள்ளது.