பாளையங்கோட்டை காவல் நிலையத்தில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தீப் பிடித்து எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சுமார் 15 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், லாரி, இருசக்கர வாகனங்கள், திடீரென தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதில், கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து நாசமாயின. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.