தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

222

தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கொடுங்கையூர் பகுதியில் பூட்டியிருந்த பேக்கரியில் நேற்று இரவு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் தீயணைப்பு வீரர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீ விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.