குரங்கனி தீவிபத்தில், மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 23 பேர் உயிரிழப்பு..!

297

23 பேர் உயிரிழந்த குரங்கனி தீவிபத்து தொடர்பான வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளில் ஏற்பட்ட தீவிபத்தில், மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 23 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக, முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, தனி அதிகாரி அதுல்ய மிஸ்ரா தலைமையில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது, தேனிக்கு சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, வழக்கை விசாரித்த அதுல்ய மிஸரா, தனது அறிக்கையை முதலமைச்சர் பழனிச்சாமியிடம் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், விசாரணை அதிகாரியை அறிக்கையின் படி வழிகாட்டு நெறிமுறைகளை பரிசீலித்து நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளது.