பேப்பர் அட்டைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து..!

123

டெல்லியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

டெல்லியில் உள்ள நரியானா பகுதியில் 3 மாடிகளை கொண்ட பேப்பர் அட்டைகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில் இன்று காலை கட்டிடத்தின் மூன்றவாது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து சென்ற தீ அணைப்புத்துறையினர் நீண்ட நேரமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடத்தில் யாராவது உயிரிழந்தார்களா? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.