மரச்சாமான் கிடங்கில் தீ விபத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம் – ஐதராபாத்…!

105

ஐதராபாத்தில் மரச்சாமான் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

ஐதராபாத்தில் உள்ள ஆசிப் நகரில் தனியாருக்கு சொந்தாமான மரச்சாமான் கிடங்கு உள்ளது. இங்கு மரத்திலான மேசை, நாற்காலி, மர பீரோ உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கிடங்கில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மரச்சாமான்கள் தீயில் கருகி நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கிடங்கில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.