வட்டாட்சியர்களின் உத்தரவின் பேரில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு..!

220

வட்டாட்சியர்களின் உத்தரவின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தூத்துக்குடி காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
22ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது வெடித்த வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 2 முதல் தகவல் அறிக்கைகளில் வட்டாட்சியர்களின் உத்தரவின் பேரில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி துணை வட்டாட்சியர் சேகர், சிப்காட் காவல் ஆய்வாளர் ஹரிஹரனுக்கும், மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன், திரேஸ்புரம் காவல் ஆய்வாளர் பார்த்திபனுக்கும் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தர விட்டுள்ளனர்.
இருப்பினும் அண்ணா நகரில் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு யார் அனுமதி அளித்தது என்ற விவரம் வெளியாகவில்லை.
அதேசமயம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியதாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.