சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் அபார வெற்றி பெற்று கோப்பையை தக்கவைத்தார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த ஜுலை 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டியில் நடப்புசாம்பியானான ஜெர்மனி வீரர் அலெக்சாண்டரும், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸும் மோதினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்சாண்டர், 6-2, 6-4 என்ற நேர் செட்கணக்கில் அலெக்சை வீழ்த்தி வெற்றி பெற்று கோப்பையை தக்கவைத்தார். .