திரையரங்கு உரிமையாளர்கள் ஜி.எஸ்.டி., கேளிக்கை வரி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் வேலைநிறுத்தம்..!

327

கேளிக்கை வரி உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
டிஜிட்டல் முறையில் படங்களை திரையிட்டு வரும் கியூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் ஒன்றாம் தேதிமுதல் திரைப்பட தாயாரிப்பாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை. இதனிடையே, சென்னையில் நடைபெற்ற திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் திரையரங்கு உரிமையாளர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதேபோன்று, அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படும் என திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.