ஜம்மு எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தாக்குதலால் ஏற்பட்ட காயம் மற்றும் சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதே போன்று, பண்டிபோரா எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர். சமீபத்தில், குப்வாரா எல்லையில் நடந்த தாக்குதலில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.