இந்திய எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெறுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.