உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதியில் வெற்றி பெற்று பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைவு..!

698

உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதியில் வெற்றி பெற்று பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் பிபாவின் உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணியும், பெல்ஜியம் அணியும் பலபரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக சென்ற போட்டியின் முதல் பாதி வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இரண்டாவது பாதி துவங்கியதும் ஆக்ரோஷமாக இரு அணிகளும் விளையாட தொடங்கின. ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் சிறப்பாக பந்தை தலையால் முட்டி கோல் அடித்தார்.

இதன் மூலம் முன்னிலை பெற்ற பிரான்ஸ் அணி தொடர்ந்து பெல்ஜியத்தின் கோல் முயற்சிகளை தடுத்து விளையாடியது. ஆட்ட நேர முடிவில் 1க்கு 0 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த பிபா தொடரின் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைந்தது பிரான்ஸ் அணி. இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும், குரோஷியா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.