தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு !!

423

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி வெயில் தொடங்கியும், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அறிவித்துள்ளது.