மீனவர்கள் தேவை அடுத்த 3 ஆண்டுகளில் பூர்த்தியாகும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

329

தமிழக மீனவர்களின் தேவைகள் அனைத்தும் 3 ஆண்டுகளில் பூர்த்தி செய்யப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் நாகூரில் 9 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மீன்வள பல்கலைக்கழகத்தை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அப்போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உடன் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஐநா சபை சிறப்பு நிதியான இரண்டாயிரம் கோடி ரூபாயைக்கொண்டு, 3 ஆண்டுகளில் கடலோர பகுதிகளில் சிறு துறைமுகம், மீன் இறங்குதளம் உட்பட மீன்பிடி தொழிலுக்கு தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்று கூறினார். அடுத்த 3 ஆண்டுகளில் மீனவர்கள் எந்த தேவைகளும் கேட்டு கோரிக்கையே வைக்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.