ஸ்பெயின் நாட்டில் தக்காளி சண்டை திருவிழா..!

909

ஸ்பெயின் நாட்டில் புகழ்பெற்ற தக்காளி சண்டை திருவிழா உற்சாகமாக நடைபெற்றது.

ஸ்பெயின் நாட்டில் கடந்த 1945ம் வருடம் முதல் ஆண்டுதோறும் தக்காளி சண்டை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில், ஒருவர் மீது மற்றொருவர் தக்காளியை வீசி சண்டை போட்டுக் கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் ஸ்பெயின் நாட்டில் உள்ள புனோல் நகரில் புகழ்பெற்ற தக்காளி சண்டை திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. இந்த திருவிழாவில், சுமார் 145 டன் தக்காளி பயன்படுத்தப்பட்டது.