சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா தொடக்கம்..!

119

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதில் ஆவணித் திருவிழா முக்கியத் திருவிழாவாக விளங்குகிறது. இந்த ஆண்டுக்கான ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

முன்னதாக நேற்று மாலை வடக்கு ரத வீதியில் உள்ள 12ம் திருநாள் மண்டபத்தில் கொடிப்பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடிப்பட்டத்தை அர்ச்சகர் கையில் ஏந்தியவாறு யானை மீது அமர்ந்து 8 வீதிகளிலும் உலா வந்தபடி கோவிலுக்கு கொண்டு சென்றார். 12 நாட்கள் நடைபெறும் இந்த ஆவணித் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துள்ளனர்.