நாகர்கோவில் அருகே நவீன சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் எடுத்துச் சென்ற வாகனத்தை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை உடைத்து, கருங்கற்களை கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு நவீன சக்தி வாய்ந்த வெடி மருத்து பொருட்கள் பயன்படுத்துவதாகவும், அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில், நாகர்கோவில் அருகே, நவீன சக்தி வாய்ந்த மலைகளை உடைக்கும் வெடி மருந்துகள் சேகரித்து வைக்கும் கிடங்கு ஒன்று இருப்பதை கிராம மக்கள் கண்டுபிடித்தனர். அப்போது, கிடங்கில் இருந்து வெடி பொருட்கள் எடுத்து வந்த வாகனத்தை மடக்கி அவர்கள் சிறைபிடித்தனர். மாட்டு சாணத்தில் மறைத்து வைத்து, அதிகாரிகளுடன் துணையுடன், வெடி பொருட்கள் எடுத்து செல்லப்படுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டினார்.