தி.மு.க.விற்கு 27 விவசாய சங்கத்தினர் ஆதரவு !

120

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பதாக 27 விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்த அவர்கள், தங்களின் ஆதரவு கடிதத்தை அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கத்தினர், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்ததாக கூறினார்கள். மக்களை ஏமாற்றிய பி.ஜே.பி. ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும், தமிழகத்தில் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சிதான் முக்கிய சாட்சி எனவும் விமர்சித்தனர்.